மேலும் 12 அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 18 அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் நியமனம் பெற்றுள்ள நிலையில் மேலும் 12 அமைச்சர்கள் இரண்டு வாரத்தில் நியமனம் பெறவுள்ளனர் எனவும் மொத்தமாக 30 அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பெறுவர் என கூறப்படுகிறது.
தற்போதைய இடைக்கால அரசாங்கம் இரண்டு வாரங்களில் மாற்றம் ஏற்படும் எனவும் ஜனாதிபதி தேசிய அரசாங்கம் ஒன்றிற்குச் செல்வார் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.