இலங்கைசெய்திகள்

இன்றைய (01.08.2024 – திங்கட்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள்!!

Paper news

1.

 தமிழ் அரசியலின் பெருந்தலைவர் காலமானார்!!

இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மற்றும்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெருந்தலைவர் இரா. சம்பந்தன் தனது 91வது வயதில் காலமானார். 

2.

திறக்கப்படும் கதிர்காமத்திற்கான  கானகப்பாதை!!

வரலாற்று சிறப்பு மிக்க தலமான கதிர்காமத்திற்கான காட்டுப் பாதை நேற்று ஞாயிற்றுக்கிழமை (30.07) கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 

3.

எரிபொருட்கள் விலைகள் குறைப்பு! 

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அறிவிப்பின் படி,  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டன.

4.

பதில் சட்டமா அதிபராக பரிந்த!! 

சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பரிந்த  ரணசிங்க பதில் சட்டமா அதிபராக நியமிக்கப்படவுள்ளார்.

5.

கடல் வளங்களில் கைவைக்கும் அதானி குழுமம்!! 

நாட்டின் கடல் படுக்கையில் உள்ள “கோபல்ட் ” என்ற கனிம வளத்தை அகழும் திட்டத்தில் அதானி குழுமம் இறங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

6.

2 கோடி தங்கத்துடன் கைதான யாழ் நபர்!! 

யாழ்ப்பாண நபர் ஒருவர் சுமார் இரண்டு கோடி பெறுமதியான தங்கத்துடன் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார். 

7.

மின் கட்டணம் குறைப்பு!!

மின்கட்டணத்தை எதிர்வரும் 16ம் திகதி முதல் குறைக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். 

8.

சம்பந்தர் போனதால் குகதாசன் எம். பி. யாகிறார்!! 

திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்புரிமை சம்பந்தரின் இழப்பினால் வெறுமையானதால் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக க. குகதாசன் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது. 

செய்தியாளர் சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button