இன்றைய பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள்!!
Paper news
1.
தமிழ் தேசிய பேரவை உருவாக்கம்!!
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் களமிறக்குவதற்காக தமிழ்த் தேசிய பேரவை என்கிற பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
2.
கச்சதீவு தொடர்பில் புதிதாக எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை¡
கச்சதீவு மற்றும் பாக்குநீரிணை எல்லைப் பிரச்னை தொடர்பில் இலங்கை இந்திய நாடுகளுக்கிடையே எதுவித உடன்படிக்கையும் ஏற்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
3.
விசக்கரைசலை அருந்திய மீனவர்கள் மரணம்!!
கடலில் மிதந்து வந்த விசக்கரைசலை மதுபானம் என நினைத்து அருந்திய மீனவர்கள் நால்வர் மரணமடைந்துள்ளனர். இத் துயரச்சம்பவம் தங்காலையில் இடம்பெற்றுள்ளது.
4.
இரணைமடு குளத்தில் நீராடிய சிறுவன் மாயம்!!
கிளிநொச்சி – இரணைமடு குளத்தில் சகோதரன் மற்றும் நண்பர்களுடன் நீராடச் சென்ற 14 வயதுச் சிறுவன் மாயமாகியுள்ளார்.
பொது வேட்பாளர் விவகாரம் தமிழ் மக்கள் யாரென்று காட்டும் முக்கிய சந்தர்ப்பம் என்கிறார் சிறிதரன் எம். பி!!
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது இந்த மண்ணில் தமிழ் மக்கள் தம்மை அடையாளப்படுத்த வரலாறு தந்திருக்கிற சந்தர்ப்பம் என சிறிதரன் எம். பி. தெரிவித்துள்ளார்.
5.
காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் மரணம்!!
காலி சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டு கைதி ஒருவர் மரணமடைந்துள்ளார்.
6.
ரணிலை ஆதரிக்குமாறு மொட்டுவை அழுத்தும் இந்தியா!!
எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு வழங்குமாறு பொதுஜன பெரமுனவுக்கு இந்தியா அழுத்தம் கொடுப்பதாக ராஜபக்ஷ குடும்பத்தின் பேச்சாளராக கருதப்படும் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
7.
தம்மிக்கவை களமிறக்கவுள்ளதா மொட்டு?
ஜனாதிபதி தேர்தலில் தம்மிக்க பெரோரேவை ஆதரிக்கும் முடிவை பொதுஜன பெரமுன கட்சி எடுக்கவுள்ளதாக நம்பகமான அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
8.
இலங்கைக்கு வந்த மிகப் பெரிய சரக்கு விமானம்!!
உலகின் மிகப் பெரிய சரக்கு விமானங்களில் ஒன்றான என்டனோவ் 124 (ANTONOV-124) கட்டுநாயக்க விமான நிலையத்தில்தரையிறங்கியதாக கூறப்படுகிறது.
செய்தியாளர் – சமர்க்கனி