பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி கானை உடனடியாக விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
செவ்வாய்க்கிழமை இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இருந்து அவர் காவலில் வைக்கப்பட்டது சட்டவிரோதமானது என்று அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
அவர் கைது செய்யப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் நடந்ததால் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் 2,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதமானது என்றும், அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும், அந்நாட்டு உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இம்ரான் கானை உயர் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவதற்கான உத்தரவை தலைமை நீதிபதி உமர் அதா பண்ட்யல், நீதிபதி முகமது அலி மசார் மற்றும் நீதிபதி அதர் மினல்லா ஆகிய மூன்று பேர் கொண்ட அமர்வு பிறப்பித்தது.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி இம்ரான் கான் சற்றுமுன்னர் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.