பட்டம் ஏற்றுவதென்பது மிக சுவாரஷ்யமானதும் ஆரோக்கியமானதுமான விடயமாகும். யாழ்.பருத்தித்துறை புலோலி பகுதி வடமராட்சியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பட்டத்தின் கயிற்றை விடாது சுமார் 40 அடி உயரத்தில் 5 நிமிடம் வரை தொங்கிக் கொண்டிருந்த சம்பவம் வடமராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்றிப்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவது இளைஞர்கள் பலர் பட்டம் விட்டுகொண்டிருந்த போது பட்டத்தின் கயிற்றை ஒரு மரத்தில் கட்டி வைத்து விட்டு பட்டம் ஏற்றியுள்ளனர். இந்நிலையில் பட்டம் ஏற்றிய இளைஞர்களால் fapw;iwf;க் கட்டுப்படுத்த முடியாமல் கைவிட்டுள்ளனர். இளம் குடும்பஸ்தர் ஒருவர் மட்டும் பட்டத்தின் கயிற்றை விடாது சுமார் 40 அடி உயரத்தில் 5 நிமிடம் வரை தொங்கிக் கொண்டிருந்துள்ளார்.
இதேவேளை குறித்த இளம் குடும்பஸ்தரின் மகள் பட்டக் கயிற்றில் தனது தந்தை தொங்கிய நிலையில் பறப்பதைக் கண்டு அந்த ஆபத்தைப் புரிந்து கொள்ளாது ஆச்சரியத்தில் கைதட்டி மகிழ்ந்துள்ளமையையும் காணக்கூடியதாக இருந்தது.