சினிமாசெய்திகள்

இளையராஜா குறித்து நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்டுள்ள தடை உத்தரவு!!

order by the court

தான் இசையமைத்த பாடல்களை தனது ஒப்பந்தத்தை மீறி நான்கு நிறுவனங்கள் பயன்படுத்தியுள்ளதாக 2019ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு விசாரணையில் எக்கோ, அகி, யுனிசிஸ், கிரி டிரேடிங் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த உரிமையுள்ளது என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதனை எதிர்த்து வழக்கு தொடுத்திருந்தார் இளையராஜா.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த எக்கோ, அகி என்ற இரு இசை நிறுவனங்களுக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த இரண்டு இசை நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணை மார்ச் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button