இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் பொதுமகனை கொடூரமாக தாக்கிய பொலிஸார்

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் பொதுமகன் ஒருவரை தாக்கும் வகையிலான காணொளி வெளியாகியுள்ளது.  

குறித்த சம்பவம் இன்று மாலை பதிவாகியுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை போக்குவரத்து பொலிஸார் நிறுத்தியதாகவும், அதனை அவதானிக்காது குறித்த நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதன் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரை பின்தொடர்ந்து வந்த பொலிஸ் அதிகாரி இடையில் மறித்து அந்த நபர்மீது தாக்குதல் நடத்தியதாக குறிப்பிடப்படுகின்றது. 

Related Articles

Leave a Reply

Back to top button