உலக சுகாதார ஸ்தாபனம் ஒமைக்ரொன் வைரஸ் திரிபு தொடர்பில் மீளவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதிய திரிபு உலகில் அதிகளவில் பரவுகின்றதுடன், ஐரோப்பிய நாடுகளுக்கு அதனூடாக ஏற்பட்டுள்ள பாதிப்பு அதிகமாகும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தென்னாபிரிக்கா உள்ளிட்ட 8 ஆபிரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை, இந்த வாரம் நீக்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் ஒமைக்ரொன் கொவிட் திரிபு கண்டறியப்பட்டதை அடுத்து, பல்வேறு நாடுகள் வெளிநாட்டு பயணக் கட்டுப்பாடுகளை விதித்தன.
அதற்கமைய, தென்னாபிரிக்கா, பொட்ஸ்வானா, மொசாம்பிக், சிம்பாப்வே, நமீபியா, எஸ்வாடினி, லெசோதோ மற்றும் மலாவி ஆகிய 8 ஆபிரிக்க நாடுகளுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்திருந்தது.
இந்த நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள பயணத் தடை நீக்கம், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.