இலங்கைசெய்திகள்

மரபணு மாற்றங்களுடன் மாறி வரும் ஒமிக்றோன்!!

Omicron

ஒமிக்ரோன் மாறுபாடு மரபணு மாற்றங்களுக்கு உட்பட்டு பரவி வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நதீகஜானகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே வைத்திய நிபுணர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய மரபணு மாற்றங்களின் ஊடாக ஒருமுறை தொற்றுக்கு உள்ளான நபருக்கு மீண்டும் ஒமிக்ரோன் வைரஸ் தொற்று ஏற்படும் வாய்ப்பு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய நிலைமைக்கு அமைய சாதாரண நபர் ஒருவருக்கு ஒரு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படுவது போதுமானது என்றாலும் அபாயமிக்க தரப்பில் காணப்படும் நபர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பூஸ்டர் தடுப்பூசிகளின் எண்ணிக்கை பரிந்துரைகளுக்கு அமைய மாறுபடக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button