கடந்த புதன்கிழமை ஓமிக்ரான் தொற்று தென்னாபிரிக்காவால் உலக சுகாதார அமைப்புக்கு முதலில் தெரிவிக்கப்பட்டது. இது அதிக மறுதொற்று அபாயத்தைக் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.
தென்னாபிரிக்காவில் இருந்து இரண்டு விமானங்களினூடாக நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமை சென்றடைந்த 13 பயணிகளிடம் புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.
இது தவிர இரு விமானங்களின் மூலம் ஆம்ஸ்டர்டாமை சென்றடைந்தவர்களில் 61 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட கொவிட் தொற்றுகள் மற்றும் புதிய மாறுபாடு குறித்த கவலைகளுக்கு மத்தியில் நெதர்லாந்தில் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன.
விருந்துபசாரம் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களுக்கான வரம்புகள் என்பவையும் புதிய கட்டுப்பாடுகளும் அடங்கும்.
இந் நிலையில் உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் தென்னாபிரிக்காவுக்கான பயணத் தடையினை அமுல்படுத்தியுள்ளன.