இன்று (21) அமெரிக்காவில் முதலாவது ஒமைக்ரொன் மரணம் பதிவாகியுள்ளது.
டெக்ஸஸ் மாநிலத்தில் இந்த மரணம் பதிவாகியுள்ளதுடன், உயிரிழந்தவர் எந்தவொரு தடுப்பூசியினையும் பெற்றிருக்கவில்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்த நபர் 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
கொவிட் திரிபினால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்பதால் தொற்றின் தீவிர தன்மை காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க சுகாதாரத்துறையினர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் அமெரிக்காவில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் 75 சதவீதமானவர்களிடத்தில் ஒமைக்ரொன் வைரஸ் திரிபு கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.