உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தற்போது குறைவடைந்துள்ள போதும் எரிபொருளின் விலையில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15 ஆம் திகதிகளில் விலைச்சூத்திரத்தின்படி,எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் என மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர முன்னதாக தெரிவித்தார்.
அதன்படி நேற்றிரவு (15) திருத்தம் அமுல்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அமைச்சு அது தொடர்பில் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Brent ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 93.91 அமெரிக்க டொலர்களாகவும் WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.42 அமெரிக்க டொலர்களாகவும் இன்று (16) காலை பதிவாகியுள்ளது.