அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியோர் தாதியர் பிரச்சினைக்கு தீர்வு வழங்காமையினால் தாதியர் சங்கங்கள் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நேற்றைய தினம் கொழும்பு பொது நூலகத்தில் தாதியர் சங்கத்தின் பொதுச்செயலாளர், எச். எம். எஸ். பி மடிவத்த இத்தகவலைத் தெரிவித்துள்ளார். எதிர் வரும் 12ம் திகதி மாபெரும் கவனியீர்ப்பு தொழிற்சங்கப் போராட்டம் இடம்பெறவுள்ளதாகவும் 47 000 தாதியர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமை குறித்து இக்கவனயீர்ப்பு முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் கூறப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, தாதியர்களின் எண்ணிக்கை வீதம், பதவி உயர்வுகளின் தாமதம், தாதியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றமை போன்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி, இதன் மூலம், நோயாளர்களும் செவிலியர்களும் பாதிப்புறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.