சற்று தள்ளி தேநீர் கடை இருந்தது.
“வாங்கோ…
ஏதாவது மெலிதாக சாப்பிட்டுவிட்டுப் போவம், “
தேவமித்திரன் சொல்ல தயங்கி நின்றாள் சமர்க்கனி.
” சமர்….என்ன நீ, ஏன் என்னை வெளி ஆளாக நினைக்கிறாய்? பொறு…பொறு…..அப்பாட்டப்போய் எல்லாம் சொலுறன்….”
அவனது போலி மிரட்டலில் இருவரும் சிரித்தனர்.
அகரனும் வண்ணமதியும் இருபக்கமாக தேவமித்திரன், சமர்க்கனியோடு நடந்து கொண்டிருந்தனர்.
“சமர், இந்த விசயத்தில் எவ்வளவு ஒற்றுமை பாத்தியா?” என்றான் இருபக்கமுமாக வந்த பிள்ளைகளைக் கண்களால் காட்டியபடி.
” ஓமோம்….ஆண்கள் , இப்படி ஒரு முடிவு எடுப்பது அபூர்வமான விடயம்” என்ற சமர்க்கனியிடம்,
“ஏன்….இதென்ன புதுமை, வாழ்க்கை பற்றிய தெளிவு இப்படி ஒரு முடிவு எடுக்க வைச்சது” என்றான் தேவமித்திரன்.
தீ …..தொடரும்.