செய்திகள்புலச்செய்திகள்

நோர்வே திரைப்பட வெளியீட்டு விழா நிகழ்வு!!

Norwegian Film Release Ceremony

கடந்த ஏப்ரல் மாதம் 28 மற்றும் 29 ம் திகதிகளில் நோர்வேயில் 13வது நோர்வே திரைப்பட வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. ஈழதேசத்தின் வலிகளை எடுத்தியம்பும் திரைப்படங்கள் அங்கு திரையிடப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில், நோர்வே நாட்டு கலைஞர்களுடன் தமிழ்நாட்டு, ஈழதேசத்து கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளனர். பல இதயபூர்வமான வரலாற்றுச் சான்றான திரைப்படங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டதுடன், படைப்பாளர்கள் நடிகர்களின் உள்ளத்து வெளிப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டிருந்தது. திரைப்படக்கலையில் உணர்வுச் சங்கமமாய் அமைந்த அந்த நிகழ்வில் தமிழ்சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் டி . இமான் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். மேதகு திரைப்பட நடிகர் குட்டிமணி, “ புத்தி் கெட்ட மனிதர்கள் எல்லாம் “ என்ற ஈழத்து திரைப்படத்தின் இயக்குநர் ராஜ் சிவராஜ் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

அந்த நிகழ்வின் காட்சிப் பதிவுகள்..

தகவல் – நோர்வேயிலிருந்து சுமி விஜி

Related Articles

Leave a Reply

Back to top button