கல்வி

விநோதமான சட்டங்களுடன் வடகொரியா!!

உலக நாடுகளில் இருந்து முற்றிலும் தனித்து நிற்கும் நாடு வடகொரியா. வட கொரியாவில் நடக்கும் நிகழ்வுகளை மற்ற உலக நாடுகளின் மக்கள் அறிந்து கொள்வது மிக மிக கடினமான ஒன்று. அதே போல வட கொரியர்களுக்கும் உலகில் என்ன நடக்கிறதுஇ மற்ற உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள் என ஒன்றுமே தெரியாது என்றே சொல்லலாம். இந்த அளவிற்கு அந்த நாடு மிக மிக விசித்திரமானது.

இந்நாட்டின் தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன். உலகில் வேறு எந்த நாடுகளிலும் இல்லாத அளவிற்கு கடுமையான கட்டுப்பாடுகளும்இ சட்டங்களும் வடகொரியாவில் உள்ளன. வடகொரியாவின் சில சட்டங்களை பற்றி நீங்கள் கேள்விப்பட்டால் திகைத்துப்போய் விடுவீர்கள்! அந்நாட்டின் பல சட்டங்கள் மிகவும் விசித்திரமாகவும்இ கடுமையானதாகவும் உள்ளன. வட கொரியா நாட்டில் பின்பற்றப்படும் சில சட்டங்கள் பற்றியும்இ அந்த நாட்டை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்!

3 டிவி சனல்கள் மட்டுமே!
வட கொரியாவில் வெறும் 3 தொலைக்காட்சி சனல்கள் மட்டுமே ஒளிபரப்பப்படுகிறது. இந்த 3 சனல்களிலும் ஒளிபரப்பாகக்கூடிய அனைத்து நிகழ்ச்சிகளையும் அந்நாட்டின் அரசாங்கமே கட்டுப்படுத்துகிறது!

சிகை அலங்காரங்கள்
வட கொரியாவில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 28 சிகை அலங்காரங்கள் (ர்யசைளவலடநள) மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இதை தவிர மற்ற சிகை அலங்காரங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டவை!

வடகொரியா தலைநகர்
வடகொரிய அரசால் அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே அந்நாட்டின் தலைநகரமான  Pyongyang-இல் வசிக்க முடியும். சாதாரண வடகொரியர்களுக்கு அங்கு வசிக்க அனுமதி இல்லை. எனவே பெரும் செல்வாக்கு படைத்த முக்கியமான வட கொரியர்கள் மட்டுமே இந்த நகரில் வசிக்கிறார்கள்!

பைபிள் தடை!
வடகொரியாவில் பைபிள் தடைசெய்யப்பட்ட நூல். மேற்கத்திய கலாச்சாரம் வட கொரியாவில் பரவக் கூடாது என்பதற்காக பைபிளை அந்நாட்டின் அரசு தடை செய்துள்ளது. ஒருமுறை பைபிளை மக்களிடம் விநியோகித்த கிறிஸ்தவப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்!

திரைப்படங்கள் பாடல்கள்
மற்ற வெளிநாடுகளில் வெளிவந்த திரைப்படங்களைப் பார்ப்பதும் இசை பாடல்களை கேட்பதும் வடகொரியாவில் தடைசெய்யப்பட்ட செயல்.

கல்வியறிவு
வடகொரியாவில் உள்ள 100 சதவீத மக்களும் கல்வியறிவு பெற்றவர்கள் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

வடகொரிய ராணுவ பலம்
வட கொரிய அரசு மூன்றில் ஒரு பங்கு வருவாயை ராணுவத்தின் வளர்ச்சிக்காகவே பயன்படுத்துகிறது. இதன் மூலம் இந்த நாடு ராணுவத்துக்கு எந்த அளவுக்கு முக்கியம் கொடுக்கிறது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது!

ஆடைக்கட்டுப்பாடு
ஜீன்ஸ் பேண்ட்கள் வடகொரியாவில் தடை செய்யப்பட்டவை. பெண்கள் நீச்சல் உடை அணிவது மிகப்பெரிய குற்றம். எந்த அரைகுறையான ஆடைகளுக்கும் வடகொரியாவில் அனுமதி இல்லை!

மோட்டார் வாகனங்கள்
சாதாரண வட கொரியர்களுக்கு பைக் கார் போன்ற மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்த அனுமதி கிடையாது. அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் மட்டுமே மோட்டார் வாகனங்களை வடகொரியாவில் பயன்படுத்துகிறார்கள்.

செல்லப்பிராணிகளுக்கு தடை!
நம் நாட்டில் பலரது வீட்டிலும் நாய்கள் பூனைகள் என்று செல்லப் பிராணிகளை வளர்ப்பது சாதாரணமான விஷயம் தான். ஆனால் வட கொரியாவில் செல்லப்பிராணிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை! விலங்குகளை செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்ப்பது வடகொரியாவில் முற்றிலும் தடை செய்யப்பட்ட செயல் ஆகும்.

சமூக வலைதளங்களுக்கு தடை!
வடகொரியாவில் எந்தவிதமான சமூக வலைதளங்களும் கிடையாது என்ற வியப்பூட்டும் தகவலை தெரிந்து கொள்ளுங்கள்!

Related Articles

Leave a Reply

Back to top button