இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்

நிருபமா ராஜபக்சவை விசாரணைக்கு அழைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிருபமா ராஜபக்ச (Nirupama Rajapaksa) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பண்டோரா ஆவணங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சொத்துக்கள் தொடர்பாக வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக அவர் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளார்.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிருபமா ராஜபக்சவின் கணவர் திருக்குமார் நடேசனுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இரண்டு தடவைகள் சம்மன் அனுப்பப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. எனினும், தம் மீது சுமத்தப்பட்ட பெரும்பாலான குற்றச்சாட்டுகளை திருக்குமார் நடேசன் மறுத்துள்ளார்.

இதேவேளை, நிருபமா ராஜபக்ச 1994 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை சுமார் 16 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிரதி அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

கருப்பு பணம் மூலம் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்த ஆவணங்களை பண்டோரா பேப்பர்ஸ் அண்மையில் வெளியிட்டிருந்தது.

இதில், இலங்கையின் முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ச (Nirupama Rajapaksa) மற்றும் அவரின் கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இந்த விவகாரம் தற்போது கொழும்பு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Related Articles

Leave a Reply

Back to top button