1. .யப்பான் செல்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
2. யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் எதிர்ப்பு போராட்டம்.
3. சீன கப்பலை கண்காணிக்க இந்தியாவுக்கு அமெரிக்கா உதவி.
4. சஜித்தின் சகாக்கள் ரணிலுடன் இணைய திட்டம்.
5. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஹிந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் (இந்திய மதிப்பில்) 200 கோடி ரூபா பண மோசடி குற்றச்சாட்டில் குற்றவாளியாக பெயரிடப்பட்டுள்ளார்.
6. வாரத்தின் ஐந்து நாட்களும் மேல்மாகாணத்தில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரத்தை விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
7. யாழ். பல்கலைக்கழகத்தில் சேர்.பொன்னம்பலம் இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடம் என்ற பெயரில் புதிய பீடத்தை ஆரம்பிக்க அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
8. இலங்கையின் தேசிய விலங்கியல் மர அணிலை மாற்றுவது குறித்து ஆராய விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது என விவசாயத்துறை, வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
9. காலிமுகத்திடல் போராட்டத்தினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான நஷ்டஈட்டை, போராட்டக்காரர்களிடமிருந்து அறவிடுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிக்கின்றார்.
போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு உரிமை காணப்படுகின்றது என கூறிய தரப்பிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்களிடமிருந்து முழுமையான நட்டஈட்டை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
10. யாழ்பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி , அறிவியல் நகர் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தொழில்நுட்ப பீடத்திற்கான கட்டடத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார்.
நேற்று ( 18 ) வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சி , அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள மூன்று மாடிகளைக் கொண்ட கட்டடத் தொகுதியின் சம்பிரதாயபூர்வத் திறப்பு விழா இடம்பெற்றது .
அரசாங்கத்தின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 525 மில்லியன் ரூபா செலவில் இந்த கட்டடத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
11. இலங்கையின் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
2007ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் இன்று கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
12. மன்னாரில் 286 மெகாவோட் ,
பூநகரியில் 234 மெகாவோட் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்காக இந்தியாவின் அதானி நிறுவனம் 500 மில்லியன் டொலர்களை முதலீடு செய்ய
இலங்கை அரசாங்கம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளதாகத் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
13. ராஜபக்ஷ அரசாங்கத்தை விரட்டியடிப்போம் என்ற தொனிப்பொருளில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த ஊர்வலம் ஜனாதிபதி செயலகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
14. லாஃப் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களில் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1050 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 5,800 ரூபாவாகும். மேலும், 5 கிலோ எடை கொண்ட லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 2,320 ரூபாவாகும்.
இதேவேளை, 2 கிலோகிராம் லாஃப் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 928 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
15. மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 26ஆம் திகதி வரை உயர் தரப்பரீட்சைக்கான விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
16. நிதியமைச்சு , பொதுமக்கள் தமது கைவசம் வைத்துள்ள வெளிநாட்டு நாணயங்களை வைப்பிலிடுவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு ஒரு மாத பொதுமன்னிப்பு காலத்தை அறிவித்துள்ளது.
17. இந்திய பிரபல தமிழ் இலக்கியப் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் (77) காலமானார்.
திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில், வயது முதிர்வு காரணமாக நெல்லைக் கண்ணன் காலமானார்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாள் பணியாற்றிய இவர் கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் மேடைகளில் பேசி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.