இன்றைய பத்திரிகை முன் பக்கத்தில் இடம்பிடிக்கக்கூடிய செய்திகள்!!
News
: 1. பருப்பு , சீனி , வெங்காயம் , மிளகாய் ஆகியவற்றின் விலைகள் கணிசமான அளவு குறைவடைந்து .
2. ஆசிரியர் சங்க பொது செயலாளர் கைதுக்கு ஐ. நாவும் எதிர்ப்பு
3. தனக்கு வாக்களிக்காதோரை ஒதுக்கும் ஜனாதிபதி : மகிந்த தரப்பு கலக்கம்
4. மின்சாரம், எரிபொருள் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகளுடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள
அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
5. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
6. காலி முகத்திடலில் இருந்து போராட்டக்காரர்களை காலி செய்யுமாறு கூறும் பொலிஸாரின் உத்தரவை இடைநிறுத்துமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மூன்று விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன
7. ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் செயலாளர் தனஞ்சய சிறிவர்தன மற்றும் முன்னாள் தலைவர் பாலித எடம்பாவல ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
8. பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளை நேட்டோ அமைப்பில் இணைத்துக்கொள்வதற்கு அமெரிக்கா செனட் சபை அனுமதி வழங்கியுள்ளது.
9. யுபுன் மற்றும் பாலிதா ஆகியோர்
வெண்கலப் பதக்கத்தையும், வெள்ளிப் பதக்கத்தையும் வென்று இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
10. எட்டியாந்தோட்டை சீபோத், பெரன்னாவ கிராமத்துக்குச் செல்லும் பாலம் உடைந்ததால் அங்குள்ள மக்கள் 4 நாட்களாக தனிமைப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
11. இலங்கையின் சுற்றுலாத் தூதுவராக கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூரியவை நியமிக்க சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தீர்மானித்துள்ளார்.
12. நாட்டில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாக மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணரட்ண தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் அவதானமாக இருக்குமாறும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் பாடசாலைக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் , பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது மிக அவதானமாகச் செயற்படுமாறும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
13 காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள், நாளை மறுதினம் நுகேகொடையில் பாரிய மக்கள் பேரணி ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளனர்.
அடக்குமுறை, அவசரகாலச் சட்டம் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு எதிராக இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நுகேகொட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கு பீடத்தை மையமாக கொண்டு ஆரம்பமாகவுள்ள இந்த பொது பேரணியில் தொழில்சார் சமூகங்கள், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் பேரவை, சிவில் அமைப்புக்கள் மற்றும் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
14. கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற கட்டட தொகுதிக்குள் இன்று நண்பகல் இரண்டு தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனரதுள்ளனர்.
குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.