இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய (16.07.2024 – செவ்வாய்க்கிழமை) பத்திரிகையின் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள்!!

News

 1.

முழுமையாக நடைமுமுறைக்கு வருமா 13!!

இலங்கையின் சட்டப் புத்தகத்தில் உள்ள 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் படுத்துவேன் எனவும் கடல் வளங்கள் கொள்ளை போவதை தடுத்து அதற்கான நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொடுப்பேன் எனவும் காணாமல் போனோர் பிரச்சினையைத் தீர்ப்பேன் எனவும்  மன்னாரில் செல்வம் அடைக்கலநாதனிடம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிதாதுள்ளார். 

2.

மின்கட்டணம் குறைப்பு!! 

வீட்டுப் பாவனைக்கான மின்சாரக் கட்டணத்தை 22.5 வீதத்தால் குறைப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி தெரிவித்துள்ளது. 

3.

நாட்டுக்கான அரசியலைச் சிந்திப்போம்!!

சம்பிரதாய அரசியலை விட்டு விட்டு நாட்டுக்கான முன்னேற்றத்தைச் சிந்திக்கும் அரசியலை முன்னெடுப்போம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

4.

தேர்தல் ஒத்திவைப்பு மனு தள்ளுபடி!!

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி  தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

5.

கொக்குத்தொடுவாயில் 52 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!! 

கொக்குத்தொடுவாயில் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் அங்கு 52 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதாகவும் இது தொடர்பான நீதிமன்றப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

6.

மகரகம புற்றுநோய் வைத்தியரை மிரட்டும் யாழ்.  போதனாவைத்தியசாலை வைத்தியர்கள்!!

யாழ் வைத்தியர்கள் தன்னை அச்சுறுத்துவதாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலை வைத்திய நிபுணர் டாக்டர் ஜெயக்குமார் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளமை பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button