இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய (14.07.2024 – ஞாயிற்றுக் கிழமை) பத்திரிகையின் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள்!!

News

  1.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது மாநாடு!!

எதிர்வரும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை  மாலை 3 மணிக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது மாநாடு யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறவுள்ளது. 

2.

யாழ்ப்பாணத்தில் சூரியசக்தி மின்சாரம் வழங்கலில் முறைகேடு – விசாரணை ஆரம்பம்!!

யாழ்ப்பாணத்தில் சூரியசக்தி மின்னிணைப்பு வழங்கப்படுவதில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அறிக்கை கோரப்பட்டுள்ளது. 

3.

நாளை விசாரணைக்கு வரும் தேர்தல் தொடர்பான அடிப்படை மனு!! 

சட்டத்தரணி அருண லக்சிறி,  ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தாக்கல் செய்துள்ள அடிப்படை மனுவை மூவர் கொண்ட நீதியரசர் குழாம் விசாரணை  செய்வதற்கு உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளமையால், நாளை குறித்த விசாரணை இடம்பெறவுள்ளது. 

4.

தம்மிக்கவின் முடிவு என்ன!! 

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பொதுஜன பெரமுன ஆதரவு வழங்காவிட்டால் அரசியலில் இருந்து விலகுவதற்கு தம்மிக்க பெரேரோ தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. 

5.

நாட்டில் வலுவான பொருளாதார அடித்தளம் இடப்பட்டுள்ளது – ஜனாதிபதி தெரிவிப்பு!!

பல்வேறு துறைகள் மூலம் நாட்டுக்குள் வலுவான பொருளாதாரத்தை  ஏற்படுத்துவதற்கான அடித்தளத்தை இட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

6.

ஜனாதிபதியைச் சந்திக்கிறாரா வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன்!!

சாவகச்சேரி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றிய வைத்திய அதிகாரி அர்ச்சுனா இராமநாதன் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

7.

சொந்த வீட்டில் கமரா பொருத்தி மாட்டிக்கொண்ட வைத்தியர்!!

மனைவியின் சகோதரி குளிக்கும் அறையில் கமரா பூட்டி, சிக்கிய யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் தொடர்பாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

8.

காற்றிலிருந்து வெண்ணெய் தயாரித்துள்ளது பில்கேட்ஸ் இன் நிறுவனம்!!

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவுனர் பில்கேட்ஸ் இன் ஸ்ராட்அப் நிறுவனம் காற்றிலிருந்து வெண்ணெய் தயாரித்துள்ளது.

9.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி மீது துப்பாக்கிச்சூடு!! 

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியாவில் பேரணியில் உரையாற்றும் போது துப்பாக்கியால் சுடப்பட்டார்.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button