இன்றைய (05.07.2024 வெள்ளிக் கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள்!!
News
1.
இந்த ஆண்டே ஜனாதிபதி தேர்தல்!!
2024 இல் ஜனாதிபதி தேர்தலை நடத்தவுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் சரியானதே என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2.
சர்வதேச நன்கொடையாளர் மாதாடு!!
நாடு தழுவிய சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வடக்கு கிழக்கை மையப்படுத்தி நடத்துவோம் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
3.
திரு. குயின்ஸ்ரன் கல்வி வெளியீட்டுப் பிரிவின் பணிப்பாளராக நியமனம்!!
இலங்கை கல்வி அமைச்சின் வெளியீட்டுப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக ஜோன் குயின்ஸ்ரன் இன்று நியமிக்கப்படவுள்ளார்.
4.
குடத்தனையில் அறுவர் கைது!!
நேற்றைய தினம் குடத்தனை பகுதியில் பொலகசாரும் இராணுவமும் சேர்ந்து நடத்திய தேடுதல் நடவடிங்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5.
இலங்கை வரும் அண்ணாமலை!!
இரா. சம்பந்தரின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிவையில் பா. ஜ. கவின் தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலை இறுதிநிகழ்வில் கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
முதலமைச்சர் மு. க. ஸ்டாலினும் கலந்து கொள்ளலாம் எனவும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
6.
ஹெகலிய குடும்பத்தினரின் வங்கி கணக்குகள் முடக்கம்!!
முன்னாள் சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல குடும்பத்தின் 16 வங்கிக் கணக்குகளும் 3 காப்புறுதிப் பத்திரங்களையும் முடக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
7.
போதைப்பொருளுக்கு அடிமையானோர் குறித்து பொலிசார் அறிவிப்பு!!
இலங்கையில் 5 இலட்சத்துக்கும் அதிகமானோர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் – சமர்க்கனி