1.
பாராளுமன்றில் இரா. சம்பந்தரின் பூதவுடலுக்கு அஞ்சலி¡
தமிழரசு கட்சியின் தலைவரான இரா. சம்பந்தரின் பூதவுடல் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் வைத்து அஞ்சலி செய்யப்பட்டது.
2.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் வழக்கை விசாரிக்க தடை!!
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் விசாரணையை நிறுத்துமாறு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
3.
நாட்டின் பொருளாதாரத்தில் ஜப்பான் மிக முக்கிய பங்காற்றியுள்ளது.!!
நாட்டின் பொருளாதார மீட்சியில் ஜப்பான் மிக முக்கியமான இடத்தை வகிப்பதாக அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
4.
நயினாதீவில் படகு விபத்து – ஒருவர் பலி!!
குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் படகு விபத்துக்குள்ளானதில் புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய இந்திரலிங்கம் அருண் என்பவர் மரணமடைந்துள்ளார்.
5.
சிறிலங்கா ஏர்லைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை!!
சிறீலங்கா எயாலைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை, புனரமைப்பு பணிகள் மாத்திரமே நடைபெறுகின்றன என துறைமுக, கப்பல் சேவை மற்றும் விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
6.
யாழில் இரு சிறுவர் இல்லங்கள் தொடர்பில் ஆளுநர் அதிரடி முடிவு!!
யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்கள் இரண்டையும் உடனடியாக மூடுமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
செய்தியாளர் – சமர்க்கனி