உலகம்செய்திகள்

தடை தளர்த்தப்பட்டது நியூயோர்க் நகரில்!!

New York

அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் பாடசாலைகள், உள்ளக அரங்குகள் உள்ளிட்ட சில இடங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணியும் கட்டுப்பாட்டை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 7 ஆம் திகதிக்குள் கொவிட் தொற்று எண்ணிக்கை குறைவாக பதிவானால் இந்த தீர்மானம் அமுல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயோர்க் நகர முதல்வர் எரிக் ஆடம்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி பாடசாலைகள், உணவகங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் திரையரங்குகளில் முகக்கவசம் அணியும் கட்டுப்பாட்டை நீக்க தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் தொற்றுநோய் கட்டுப்பாடுகளை திரும்பப் பெறுவது என்பது ஓர் ஆபத்தான விடயமாகும்.

எனினும் நகரத்தின் இயல்பு நிலையை மீட்டெடுக்கவும் அதன் பொருளாதார மீட்சியை அதிகரிக்கவும் உதவும் என பலர் நம்புவதனால் இந்நடைமுறையை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Back to top button