செய்திகள்தொழில்நுட்பம்

பூமியைப் போன்ற மற்றொரு கிரகத்தைக் கண்டுபிடித்த நாசா விஞ்ஞானிகள்!!

New planet

பூமியை போன்ற வேறு கிரகம் ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியைப் பயன்படுத்தி அவர்கள் இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.

பூமியில் இருந்து 41 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்தக் கோள் பூமியை ஒத்ததாக அமைந்துள்ளது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

LHS 475 b எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கோளின் வளிமண்டல அமைப்பு எப்படியானது என்பது இன்னும் தெளிவாகவில்லை.

இந்தக் கோளில் சில வாயுக்கள் இருப்பதாக ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பௌதீக ஆய்வுக்கூடத்தில் கலாநிதி பட்டதாரியான ஜேகப் லஸ்டிங் யேகேர் தெரிவித்துள்ளார்.

அந்த கிரகத்தில் கன மீதேனுடன் கூடிய வாயு இருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாறைக் கிரகமான இந்தக் கிரகம் பூமியை விட ஒரு வீதம் சிறியது. இந்தக் கிரகத்தில் உயிர்கள் வாழ்கின்றனவா அல்லது மனிதர்கள் வாழ முடியுமா என்பது குறித்த உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Related Articles

Leave a Reply

Back to top button