தென்மராட்சிப் பகுதியில் புலம்பெயர் உறகள் ஒன்றிணைந்து கட்டிமுடிக்கப்படாமல் இருந்த இல்லம் ஒன்றினை முழுமை செய்து உரியவர்களிடம் கையளித்துள்ளமை அனைரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மட்டுவில் தெற்கு பகுதியில் சசிகரன் ஜீவகுமாரி குடும்பத்திற்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அரசவீட்டுதிட்டம் கிடைத்து வேலைகள் நடைபெற்ற வேளை மனைவி ஜீவகுமாரி அகாலமரணமடைந்தார் . இதனால் இந்தக் குடும்பம் நிலைகுலைந்து வீட்டுத்திட்ட வேலைகளும் இடைநடுவில் நின்று விட்டது .
இதனை அறிந்த வெளிநாட்டுவாழ் மட்டுவில் தெற்கு தன்னாரவ கொடையாளரகள் சிறு துளி பெருவெள்ளமாக பங்களித்து 900000 செலவில் வீட்டைப் பூரணப்படுத்தி இன்று பதுமனை புகுவிழாசெய்து இறந்த மனைவியின் பெயரில் ‘ஜீவாஇல்லம்’ எனப் பெயர் சூட்டி அந்தக் குடும்பத்தை மகிழ்வித்துள்ளனர்.
இச்செயற்பாடு ஓர் முன்மாதிரியான செயற்பாடு என சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர் .ஏனைய இடங்களிலும் இவ்வாறு பல வீடுகள், வருமானக் குறைவு காரணமாக முற்றுப்பெறாமல் இருப்பதாகவும் இவ்வாறான ஒன்றுபட்ட உதவிகள் மூலம் அந்ந்தப் பிரதேச வெளிநாட்டு நண்பர்கள் மூலம் பூர்த்தி செய்து கொடுப்பதற்கு, இன்றைய இந்தச் செயற்பாடு முன்னுதாரனம் என்பதும் குறிப்பிடத்தக்கது