இணைய கட்டணங்கள் மற்றும் தொலைபேசிக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரி (வட் வரி) 12%ஆக நேற்று முன் தினம் அதிகரிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக தொலைபேசி மற்றும் இணையக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.