Uncategorized
கோலாகலமாக ஆரம்பமானது வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா (வீடியோ, படங்கள் இணைப்பு)!!
Nelliyady

வள்ளுவன், இளங்கோ, அகத்தியன் என பலபேர் ஓதி வளர்த்த ஆதிதமிழின் அழகு சிறக்க வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் பண்பாட்டுப் பெருவிழா இன்று யாழ். வடமராட்சி, கரவெட்டி, நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெறுகின்றது.

இயல் இசை நாடகம் முழங்க , தங்கத் தமிழ் மணக்கும் இன்ப வரவேற்புடன் இனிதே ஆரம்பமானது.
நெல்லியடி, முருகன் கோயில் முன்றலில் ஆரம்பமாகி நெல்லியடி மத்திய கல்லூரி நோக்கி முத்தமிழ் நகரத் தொடங்கியுள்ளது.







