15 அமைச்சர்களைக் கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய அரசாங்கத்தை அமைக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளது.
கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ், இது தொடர்பில் எதிர்காலத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட தரப்பினருக்கும் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட பல நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட பிரேரணை குறித்து மாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளிக்க வந்த போதே சாலிய பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.