ஜூலை 22 அன்று கடந்த 2020ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதன்படி, 2020ஆம் ஆண்டுக்கான சிறந்த படமாக சூரரைப் போற்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், 2020ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக சூர்யாவும், சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளியும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த பின்னணி இசைக்கான விருதுக்காக சூரரைப் போற்று பட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், சிறந்த திரைக்கதைக்கான விருதுக்கும் சூரரைப் போற்று படம் தெரிவாகியுள்ளது.
சிறந்த வசனத்துக்காக மண்டேலா படத்துக்காக மடோனா அஸ்வினுக்கு கிடைக்கவுள்ளது.
இதற்கிடையில், திரைப்பட தயாரிப்புக்கு சாதகமான சூழல் நிலவும் மாநிலமாக மத்திய பிரதேசம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படத்துறை தொடர்பான சிறந்த புத்தகமாக தி லோங்கஸ்ட் கிஸ் என்ற புத்தகத்துக்கு கிடைக்கப்பெறவுள்ளது.
சிறந்த தெலுங்குப் படமாக கலர் போட்டோவும், சிறந்த தமிழ் படமாக சிவரஞ்சனியும் சில பெண்களும் என்ற படமும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
சிறந்த இசையமைப்பாளராக அல வைக்குந்தபுரமுலோ படத்துக்காக தமன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருதுக்காக சிவரஞ்சனியும் சில பெண்களும் படத்தின் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் தெரிவாகியுள்ளார்.