இலங்கைசெய்திகள்

திருகோணமலை மூதூர் அல்ஹிலால் மத்திய கல்லுாரியின் பழைய மாணவன் தேசிய இராணுவ தடகளப்போட்டியில் சாதனை!!

National Army Athletics Championships

செய்தியாளர் –

ஏ.ஜே.எம்.சாலி,  திருகோணமலை


 அன்மையில் நடைபெற்ற 2020/2021 ஆண்டுக்கான 57 ஆவது தேசிய இராணுவ தடகளப்போட்டியில் மூதூர் அல்ஹிலால் மத்திய கல்லூரியின் பழைய மாணவனும், கொழும்பு பல்கலைகழகத்தின்மாணவருமான R.M.நிப்ராஸ் அவர்கள் பின்வரும் தேசிய மட்டப் போட்டிகளில் இரண்டு தங்கம் உள்ளடங்களாக ஒரு வெள்ளிப்பதக்கம் பெற்று மொத்தமாக மூன்று பதக்கங்களுடன் சாதனை படைத்துள்ளார். 


இதனடிப்படையில்  1500 மீற்றர் ஓட்டம் முதலாமிடம் பெற்று தங்கப்பதக்கம். 
 4 X 1500 மீற்றர் ஓட்டத்தில் முதலாமிடம் பெற்று தங்கப்பதக்கம். 
 4 X 800 மீற்றர் ஓட்டத்தில் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப்பதக்கத்தையும் சுவீகரித்துள்ளார். 

Related Articles

Leave a Reply

Back to top button