இலங்கைசெய்திகள்

அதிகாரிகளின் அலுவலர்களின் முழு ஒத்துழைப்புடன்தான் மக்களுக்கான வாழ்வாதாரத் திட்டங்கள் வெற்றிபெற முடியும் – நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்!!

Nasir Ahmed

செய்தியாளர் – சக்தி அதிகாரிகளின் அலுவலர்களின் முழு ஒத்துழைப்புடன்தான் மக்களுக்கான வாழ்வாதாரத் திட்டங்கள் வெற்றியடைய முடியும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி இணைப்புக் குழுவின் தலைவருமான நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர பிரதேச செயலகத்துக்கான இவ்வாண்டின் இறுதி பிரதேச அபிவிருத்தி இணைப்புக் குழுக் கூட்டம் பிரதேச அபிவிருத்தி இணைப்புக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை 21.12.2021  இடம்பெற்றது.

பிரதேச உதவிச் செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர் திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் எம். ஹன்சுல் சிஹானா ஏறாவூர் நகர சபை ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச சபைகளின் தலைவர்கள் அதனதன் உறுப்பினர்கள் உட்பட திணைக்கள கூட்டுத்தாபன தலைவர்களும் இன்னும் பல பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்இ இதற்கு முன்னரான வரவு செலவுத் திட்டங்கள் உட்கட்டமைப்பு உட்பட இன்னும் வெவ்வேறு வகையான அபிவிருத்தித் திட்டங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்;பட்டு செயற்படுத்தப்பட்டு வந்துள்ளன.

ஆனால் இம்முறை அங்கீகரிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் மக்களின் வாழ்வாதாரத்தை மையப்படுத்தியதாக தயாரிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்த விடயத்தில் அதிக கவனமெடுத்துள்ளார்.

இந்த வாழ்வாதார வரவு செலவுத் திட்டம் வெற்றி பெற்று வறிய மக்கள் முன்னேறவேண்டுமாக இருந்தால் குறிப்பாக ஒவ்வொரு கிராமப் பிரிவு மட்டத்திலுமுள்ள அதிகாரிகளினுடைய பங்களிப்பு மிகவும் அவசியம்.

ஏழை மக்களுக்கான வாழ்வாதாரத் திட்டங்கள் சரியான கிரமமான முறையிலே கண்காணிக்கப்பட வேண்டும்.

பிரதேச அரசியல் மட்டத் தலைவர்கள் கூட எதிர்த்து நிற்காமல் அரசியல் வேறுபாடுகளை மறந்து மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளிலே ஒத்துழைப்பு வழங்க வேண்டும்;.” என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button