இலங்கைசெய்திகள்

நாப்கின்களின் விலை குறையும்!!

Napkin

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சானிட்டரி நாப்கின்களின் விலை குறையும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கு அமைய, அத்தியாவசியமான ஐந்து மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகளை விலக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் நேற்று (2) அறிவித்தது.

அத்துடன், இறக்குமதி செய்யப்பட்ட சுகாதார பொருட்களுக்கு வரிச்சலுகைகளையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் மத்தியில் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில், சுகாதாரப் பொருட்களை மிகவும் மலிவு விலையில் தயாரிப்பதற்காக இந்த முடிவை அரசாங்கம் எட்டியுள்ளது.

அதன்படி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 10 சானிட்டரி நாப்கின்கள் கொண்ட ஒரு பேக்கின் விலை ரூ. 50-60ஆல் குறைக்கப்படும்.

இந்த வரிச் சலுகைகள் ஒரு பெக்கின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 260-270. மேலும், இறக்குமதி செய்யப்பட்ட சுகாதாரப் பொருட்களின் சில்லறை விலைகள் 18-19% வரை குறைக்கப்படும்.

Related Articles

Leave a Reply

Back to top button