இலங்கைசெய்திகள்

எனது தந்தை எம்.பி பதவியிலிருந்து வி விலக மாட்டார் – நாமல்!!

Namal

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தற்போது மிக நெருக்கடியான ஒரு சூழலில் சிக்கியுள்ளார்.

76 வயதான இவருடைய ஐம்பது வருட அரசியல் வாழ்க்கை ஆட்டம் கண்டிருக்கிறது.

இந்த நிலையில் அவருடைய மகன் நாமல் ராஜபக்ச ஏ.எவ்.பி செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

முன்னாள் பிரதமர் நாட்டைவிட்டு ஓடப்போவதாக தகவல் பரவியுள்ளது. அவ்வாறு நாட்டை விட்டுப் செல்லவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை எனவும் அவர் மிகப்பாதுகாப்பாக எம்முடன் தொடர்பில் தான் உள்ளார் எனவும் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எனது தந்தை இதுவரை எம்.பி பதவியை இராஜினாமா செய்யவில்லை. மக்களின் ஜனநாயக உரிமைகளை நாங்கள் மதிக்கின்றோம் எனவும் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button