இலங்கைசெய்திகள்

ஆயிஷா கொலை-இருவர் சிக்கினர்!!

Murder of Ayesha

(நமது விசேட செய்தியாளர்)

பண்டாரகம – அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்களில் ஒருவர் கீரைத் தோட்டத் தொழிலாளர் என்பது தெரியவந்துள்ளது.

அவரது வீட்டிலுள்ள கட்டிலுக்கு அடியில் இருந்து சேறு படிந்திருந்த நிலையில் சாரம் ஒன்றைப் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கீரைத் தோட்டத்தை அண்டிய காணியொன்றில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்தே, உயிரிழந்த நிலையில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது என விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.

இதேவேளை, மரணம் தொடர்பில் பல பிரிவுகளின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் 5 பொலிஸ் குழுவினர் இணைந்து இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதற்கமைய, அப்பகுதியில் சி.சி.ரி.வி கமராவின் காட்சிகள் மற்றும் போதைப்பொருட்களுடன் தொடர்புடைய நபர்கள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அப்பகுதியிலுள்ள தொலைபேசி சமிக்ஞை கோபுரங்களிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button