உலகம் முழுவதும் இந்த ஆண்டில் பணியின்போது 67 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சா்வதேச செய்தியாளா்கள் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2022-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் செய்தி சேகரிக்கும் பணியின்போது 67 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனா்.
கடந்த ஆண்டு வன்முறை சம்பவங்களால் 47 ஊடகவியலாளர்கள் பலியான நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உக்ரைன் போா், ஹெய்ட்டி அரசியல் பதற்றம், மெக்ஸிகோ கும்பல் வன்முறை போன்ற காரணங்களால் ஊடகவியலாளர்களின் உயிரிழப்பு இந்த ஆண்டு இவ்வளவு அதிகமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.