இலங்கைசெய்திகள்

குடும்பச் சண்டையில் இளைஞர் படுகொலை!!

murder

பதுளையில் இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளை, கருணாபுர பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

பித்தளையிலான பூந்தொட்டி மற்றும் நாற்காலியால் குறித்த இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.

குடும்பச் சண்டையே இந்தப் படுகொலைக்குக் காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய ஐவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் – சுடர்

Related Articles

Leave a Reply

Back to top button