இலங்கை அரசாங்கம் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது. இந்நிலையில் நாளைய தினம் நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தற்போது கையொப்பங்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை இடம்பெற்றுவருகிறது எனவும் கையெழுத்துகள் பெறப்பட்டதன் பின்னர் அதனை சபாநாயகருக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவை பெற்றுக் கொள்வதற்காக நாடாளுமன்றத்திலுள்ள ஏனைய அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடல் முன்னெடுக்கப்படும் எனவும்
நாடாளுமன்றில் தற்போதைய அரசாங்கத்திற்கு 113 என்ற பெரும்பான்மை இல்லை என்பதை வெளிப்படுத்துவதே தங்களது பிரதான நோக்கமாகும் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.