இலங்கைசெய்திகள்

கல்கிஸையில் மாணவி ஒருவரைக் காணவில்லை!!

கல்கிஸ்ஸை – பீரிஸ் வீதியில் வசிக்கும் பாடசாலை மாணவியொருவர் காணமால்போயுள்ளதாக அவரது பெற்றோர் காவல்துறையில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.

கடந்த 13ஆம் திகதியிலிருந்து அவர் காணாமல் போயுள்ளதாகவும், அது தொடர்பாக காவல்நிலையங்கள் சிலவற்றிற்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும் மாணவியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

பம்பலப்பிட்டியில் உள்ள மகளிர் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 18 வயதுடைய மாணவியொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button