இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று முதல் போதிலும், உள்நாட்டு பால் மாவின் விலையில் மாற்றம் செய்ய முடியாது என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இன்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால் மா ஒரு கிலோ 200 ரூபாவாலும் 400 கிராம் பால் மா ஒன்றின் விலை 80 ரூபாவாலும் குறைக்க பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, 1,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 400 கிராம் பால் மாவின் புதிய விலை 1,160 ஆகவும், 1 கிலோ பால்மா விலை 3,100 ரூபாவில் இருந்து 2,900 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.