உலகம்செய்திகள்

சோவியத் யூனியனின் கடைசி தலைவர் காலமானார்!!

Mikhail Gorbachev

சோவியத் யூனியனின் கடைசி தலைவரும், சீர்திருத்தவாதியுமான மிக்கைல் கோர்பசேவ், 91 உடல்நலக்குறைவால் காலமானார்.

சிதறுண்ட சோவியன் யூனியனின் முதுபெரும் அரசியல் தலைவரான இவர் சோவியத் யூனியனின் தலைவராக 1985 முதல் 1991-ம் ஆண்டு சோவியத் யூனியன் கலைக்கப்படும் வரை தலைவராக இருந்தார்.

அப்போது மிகப்பெரிய சீர்திருத்தங்களை கொண்டுவந்தார். இவரது சிறந்த நிர்வாகத்தில் பனிப்போர் முடிவுக்கு வந்தது. சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து பல்வேறு நாடுகள் குடியரசாயின. 1990ம் ஆண்டு இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிலையில் வயது முதுமை ,உடல்நலக்குறைவு காரணமாக இறந்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கோர்பசேவ் மறைவுக்கு ரஷ்ய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button