இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக 21ஆம் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஆராய்ந்து இறுதித் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்காக தமிழ் தேசியக்கட்சிகள் இன்று ஒன்றுகூடவுள்ளன.
21ஆம் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் மற்றும் ஏனைய தமிழ்கட்சிகளும் குறித்த சந்திப்பில் பங்கேற்று, ஆராயவுள்ளன.
அதேநேரம், குறித்த சந்திப்புக்கு முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்தச் சந்திப்பானது, வவுனியாவில் இன்று பிற்பகல் 3மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.