சபாநாயகர் தலைமையில் நாளை (11) கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று கூட்டப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும்,தற்போதைய அரசியல் நெருக்கடி மற்றும் நாட்டில் தற்போது நிலவும் முரண்பாடுகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.