இன்று ( வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் விசேட குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து தீர்மானிக்கும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.