பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் எதிர்வரும் 21ஆம் திகதி எரிவாயு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் பிரதானிகள் பங்கேற்கவுள்ளதோடு இதன்போது பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளைஇ நாட்டில் விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயுவில் அடங்க வேண்டிய ப்ரோபேன் செறிமானத்தின் அளவு 100க்கு 30 சதவீதமாகக் காணப்பட வேண்டும் என இலங்கை தரநிர்ணய நிறுவகம் தீர்மானித்துள்ளது.
இந்த அளவு செறிவுடைய எரிவாயுவை மாத்திரமே சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளர் நாகனந்த கொடித்துவக்குவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம்இ தற்போது சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள பயன்படுத்தப்படாத சமையல் எரிவாயு கொள்கலன்களை மீளப் பெற நடவடிக்கை எடுக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் சமையல் எரிவாயு கொள்கலன்களில் அடங்கும் செறிமானம் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் இரண்டு நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
தற்போது நுகர்வோரிடம் உள்ள பகுதியளவில் பயன்படுத்தப்பட்ட சமையல் எரிவாயுக்களை மீளப் பெற்று அதற்காக ஓரளவு பணத்தைச் செலுத்துமாறு மனுதாரர் நீதிமன்றில் கோரியுள்ளார்.
இது தொடர்பான விடயங்களை ஆராய்ந்து முறைமை ஒன்றைத் தயாரிக்குமாறு நீதியரசர்கள் ஆயம் நுகர்வோர் அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளது.
கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.