தற்போது கறுப்புசந்தையில் பெற்றோல் 2000ரூபா-3000 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதற்கும் சுகாதார ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பதாக புத்திஜீவிகள் குற்றம் சாட்டுகின்றனர் .
அத்தியாவசிய பணியின் நிமிர்த்தம் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் பெற்றோலை சில மானம் கெட்ட. சுகாதாரதுறை ஊழியர்கள் தமது பிரதேசத்தில் இரகசியமாக கறுப்புச் சந்தையில் மிகக் கூடிய விலையில் விற்பனைசெய்து கொள்ளை இலாபம் உழைப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில்
சுகாதாரத் துறை ஊழியர்களையும் அவர்களது மேலதிகாரிகளையும் கவனமாக சுய ஒழுக்கத்துடன் பணியாற்றுமாறு புத்திசாலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தச் செயற்பாட்டால் ஒட்டுமொத்த சுகாதார உத்தியோகத்தர் அனைவருக்குக்குமே களங்கம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.