இலங்கையில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கொண்டு வரவுள்ள புதிய கட்டுப்பாடு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி , கையடக்கத் தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வர்த்தக விளம்பர குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் வழங்கப்படுவதை கட்டுப்படுத்துவதற்கான விதிகளை தயாரிக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தீர்மானித்துள்ளது.
தயாரிக்கப்பட்ட குறித்த தொடர் வழிகாட்டுதல்களை இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கையடக்கத் தொலைபேசி நிறுவனங்களிடமிருந்து கைத்தொலைபேசி பாவனையாளர்களின் தனியுரிமை மற்றும் அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ச்சியாக வரும் குறுஞ்செய்திகள் தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஆனால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி நிறுவனங்கள் செயல்படாததால், அதை சட்டமாக வர்த்தமானியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, விற்பனையாளர் விளம்பர உரைச் செய்தியை அனுப்புவதற்கு பெறுநரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.