இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

வடமாகாண புதிய ஆளுநருக்கு தலையிடி கொடுத்த மெய்ப்பாதுகாவலர்!

வடமாகாண புதிய ஆளுநருக்கு தலையிடி கொடுத்த மெய்ப்பாதுகாவலர்!

சனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் கடந்த சில நாட்களின் முன்னர் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா, (Jeevan Thiyagaraja)கடந்தவாரம் வரலாற்றுப் பிரசித்தி வாய்ந்த  மன்னார்  திருக்கேதீஸ்வரம் ஆலயம் சென்று பூஜை வழிபாடுகளிலும் கலந்துகொண்டுள்ளார்.

இதன்போது அவருடன் சென்ற மெய்ப்பாதுகாவலர் தொடர்பில் பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர். இந்துக்களின் புனிதமான ஆலயமான திருக்கேதீஸ்வர ஆலயத்தில் அதன் புனித தன்மையை உதாசீனம் செய்து குறித்த நபர் சப்பாத்தை கழற்றாது சென்றுள்ளார்.அதோடு ஆளுநர் ஜீவன் தியாகராஜா உள்ளிடவர்கள் ஆலய வீதியில் வெறும் காலுடன் சென்றபோது குறித்த மெய்ப்பாதுகாவலர் மட்டும் சப்பாத்துடன் சென்றுள்ளார். அதுமட்டுமல்லாது புனித தீர்த்தமான பாலாவியிலும் அவர் சப்பாத்துகாலுடனே இறங்கியுள்ளார்.

இறைவனை நீராட்டுவதற்காக எடுக்கப்படும் புண்ணிய நீரில் இவ்வாறு அவர் சப்பாத்துக்காலுடன் நின்றுள்ளமை தொடர்பில் பலரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.அதோடு தமிழரின் புண்ணிய பூமியை மதிக்காது சென்றவர் தொடர்பில் பலரும் மௌனமாக இருப்பது வேடிக்கையாக உள்ளது எனக் குறிப்பிடும் சமூக ஆர்வலர்கள், சப்பாத்துடன் செல்லவேண்டாமென கூட சென்ற யாரும் ஏன் எடுத்துரைக்கவில்லை எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை கடந்த சில நாட்களின் முன்னர் யாழ்ப்பாணம் தொண்டமனாறு செல்வச் சன்னதியான் ஆலயத்தில் சிங்கள பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சப்பாத்து காலுடன் சென்றமை பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்த நிலையில் மறுநாள் குறித்த உத்தியோகஸ்தர் ஆலயம் சென்று தனது தவறுக்காக பிராயச்சித்தம் தேடிகொண்டார்.

இவ்வாறான நிலையில் வடமாகாண ஆளுநர் மற்றும் அவருடன் சென்ற ஒரு தமிழருக்கும் வரலாற்று பிரசித்தி வாய்ந்த  இந்து ஆலயத்தினுள் செல்கையில் சப்பாத்து காலுடன் செல்லக்கூடாது என்பது தெரியாதா எனவும் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Gallery
Gallery
Gallery

Related Articles

Leave a Reply

Back to top button