சினிமாசெய்திகள்

எட்டு நிமிடங்களில் ‘மணி ஹெய்ஸ்ட்’ முன்கதைச் சுருக்கம்!!

Mani Heist

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வந்த ’மணி ஹெய்ஸ்ட்’ தொடர் ஐந்து சீசன்கள் முடிவடைந்து ஐந்தாம் சீசனில் இரண்டாம் பாகம் இன்று வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பாகத்தில் ஐந்து எபிசோடுகள் உள்ளதாகவும் ஒவ்வொன்றும் சுமார் 50 நிமிடங்கள் ஓடும் என்றும் இத்துடன் இத்தொடர் முடிவுக்கு வந்ததாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியாகியிருக்கும் ஐந்தாவது சீசனின் இரண்டாம் பாகத்தில் கிளைமாக்ஸ் எப்படியிருக்கும்? புரபொசருக்கு என்ன ஆகும்? அவருடைய தங்கம் கொள்ளை முயற்சி வெற்றி பெற்றதா? என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இதற்கு முன் ’மணி ஹெய்ஸ்ட்’ 5 சீசனை பார்க்காதவர்களுக்காக ’மணி ஹெய்ஸ்ட்’ தொடரின் ஐந்து சீசன்களையும் எட்டு நிமிடத்தில் சுருக்கி தமிழ் நடிகர் ஆர்ஜே பாலாஜி அவர்கள் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். நெட்பிளிக்ஸ் சமூகவலைதளத்தில் ஒளிபரப்பாகிய இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button