பிரதமர் மகிந்தவுக்கு புத்தாண்டுக்கு பின்னர் தோசங்கள் நிவர்த்தியாகி நல்ல காலம் பிறக்கவுள்ளதாக ஜோதிடர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் வலுப்பெற்றுள்ளது. இந்த நிலையில்
தனக்கான புதிய இரு ஆஸ்தான ஜோதிடர்களை மஹிந்த வைத்துள்ளதாக தெரிய வருகிறது. இதனையடுத்து சமகாலத்தில் அவர்களின் ஆலோசனைக்கு அமையவே மஹிந்த செயற்பட்டு வருகிறார்.
அதன்படி பிரதமரின் ஜோதிட செயற்பாடுகள் மற்றும் ஜோதிடர்களை ஒருங்கிணைக்கப்படும் நடவடிக்கைள் பிரதமரின் அலுவலக தலைமை அதிகாரியினால் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.